நாளை திங்கட்கிழமை (23.12.2024) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை பயணிகள் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தவுள்ளனர்.
24 மணித்தியாலங்களும் நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனப் பொலிஸ் தலைமையகம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக் காலமாக அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைக் கருத்திற் கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.