கீரிமலையில் திருவாசகம் முற்றோதல்

கீரிமலை ஸ்ரீ மகாமுத்துமாரி அம்மன் ஆலயத்தில் நாளை புதன்கிழமை (25.12.2024) காலை முதல் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. திருவாசக முற்றோதல் நிகழ்வைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கலும் நடைபெறும். 

இதேவேளை, திருவாசக முற்றோதல் நிகழ்வில் கலந்து கொண்டு திருவாசக பாராயணம் செய்யும் சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.