கோப்பாயில் கண்களுக்கு விருந்தளித்த முன்பள்ளிச் சிறார்களின் கலைவிழா

கோப்பாய் ரெயின்போ முன்பள்ளியின் கலைவிழா நேற்று முன்தினம் சனிக்கிழமை (21.12.2024) காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் முன்பள்ளியின் அதிபர் அனுஜா அருள்நேசன் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.



இந் நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன், புத்தூர் பஞ்சசீக வித்தியாலய அதிபர் திருமதி.கவிதா லலீசன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும், ஆரம்பக் கல்வி மூத்த ஆசிரியர் துவாரகா செந்தில்நேசன், ரெயின்போ முன்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஜீவிதாசன் டினோஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.