யாழ்.பல்கலைக்கழகத்தில் களைகட்டவுள்ள மார்கழி இசைவிழா

யாழ்.இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ்.வணிகர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த்துள்ள 2024 மார்கழி இசைவிழா எதிர்வரும்-27, 28, 29 ஆம் திகதிகளில் மாலை-05 மணி முதல் இரவு-09 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளது. 

தவில், நாதஸ்வரம், வயலின், கர்நாடக சங்கீதம், நடனம், நாட்டிய நாடகம், இலக்கிய நாடகம் போன்ற கலாசாரப் பண்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கிய மாபெரும் இசைவிழாவாக நடாத்தப்படவுள்ள மூன்று நாள் நிகழ்வுகளிலும் இந்திய ஈழத்துக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.