கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கிறிஸ்தவ மன்றம் நடாத்தும் ஒளிவிழா நாளை புதன்கிழமை (04.12.2024) காலை-08:30 மணியளவில் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் கிறிஸ்தவ பாட விரிவுரையாளர் அ.ஜேம்ஸ் மெய்ஷான், யாழ்.மறை மாவட்ட மறைக்கல்வி நடுவுநிலைய இயக்குனர் அருட்பணி டியூக் வின்சென்ட் அடிகளார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர்.