மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான கருவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (03.12.2024) முற்பகல்-10 மணி முதல் நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கருவி நிறுவனத் தலைவர் க.சர்வானந்தா தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன் பிரதம விருந்தினராகவும், யாழ்.அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையின் ஆசிரியர் செல்வராசா அட்ஜெயலிங்கம், சுன்னாகம் பொதுநூலகப் பிரதம நூலகர் திருமதி.ஜெயலட்சுமி சுதர்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பாலசுப்ரமணியம் ஜெயபாலன், திருமதி.சசிலதா ஜெயக்குமார் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.