சமூகத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தையும் புத்தகத்தின் வாயிலாக ஒருங்கிணைக்கும் நோக்குடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியம் "புத்தக யாசகன்" செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு கிராம நூலகங்களிற்காகவும் குறித்த செயற்திட்டம் செயற்படு த்தப்படுகிறது. இந்நிலையில் இந்தச் செயற்திட்டத்திற்குப் பு திய புத்தகங்கள், பாவித்த நல்ல நிலையிலுள்ள புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் எனப் பல்துறை சார்ந்த புத்தகங்களைப் பொதுமக்கள் அன்பளிப்புச் செய்து உதவிடுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச் செயற்திட்டத்திற்கு உதவ ஆர்வமுள்ளவர்கள் 0771451397, 0773681249, 0775066343 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.