சித்தன்கேணி இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் அமரர். விமலேந்திரன் கவிதனின் எட்டாவது ஆண்டு நினைவாக இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (07.12.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை சித்தன்கேணி இளைஞர் முன்னேற்றக் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்