வரலாற்றுத் தொன்மைவாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி தின மஹோற்சவம் நாளை வியாழக்கிழமை (02.01.2024) நண்பகல்-12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் மேற்படி ஆலய மஹோற்சவம் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறும். வைகுண்ட ஏகாதசி நாளான எதிர்வரும்-10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த் திருவிழா நடைபெறும். அன்றைய தினம் அதிகாலை- 03 மணிக்கு சங்காபிசேகம், அதிகாலை-05 மணிக்கு சுவர்க்கவாயில் தரிசனம், காலை-08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து முற்பகல்-10.25 மணிக்குச் சித்திரத் தேரில் வரதராஜப் பெருமான் ஆரோகணிக்கும் திருக்காட்சியும், மறுநாள்-11 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08 மணிக்கு வரதராஜப் பெருமான் மஞ்சத்தில் திருவடி நிலைக் கடற்கரைக்குப் புறப்பட்டுத் தொடர்ந்து தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-08 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
மஹோற்சவத்தின் காலை உற்சவம் தினமும் காலை-08 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-04 மணிக்கும் ஆரம்பமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.