தைப்பொங்கலை முன்னிட்டு ஏழாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஏழாலை சகோதர இளைஞர்கள் அமைப்பினர் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (13.01.2025) காலை-08 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை ஏழாலை தெற்கில் அமைந்துள்ள தனியார் வர்த்தக நிலைய மண்டபமொன்றில் நடைபெறவுள்ளது.


குறித்த இரத்ததான முகாம் முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.