குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு

யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.01.2025) தைப்பொங்கல் சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை-08 மணியளவில் ஆச்சிரம முன்றலில் தைப்பொங்கல் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கும், ஆச்சிரமத்தினுள்  எழுந்தருளியுள்ள சிவலிங்கப் பெருமானுக்கும், ஈழத்து, இந்தியச் சித்தர்கள், ஞானிகளின் உருவப் படங்களுக்கும் வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குப் பொங்கல் பரிமாறப்பட்டது.