குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) காலை-09 மணியளவில் மேற்படி பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் நூற்றாண்டு விழா தொடர்பான கலந்துரையாடல், பாடசாலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் புதிய நிர்வாகசபைத் தெரிவு என்பன இடம்பெறும். அனைவரையும் இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மேற்படி பழைய மாணவர் சங்கத்தினர் கேட்டுள்ளனர்.