சாவகச்சேரியில் மாபெரும் இரத்ததான முகாம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக வைத்தியசாலையின்  இரத்தவங்கிப் பிரிவுடன் விதையனைத்தும் விருட்சமே குழுமம் இணைந்து தென்மராட்சிப் பொது அமைப்புக்களின் அனுசரணையுடன் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை( 19. 01. 2025) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.