வரலாற்றுப் பழமை வாய்ந்த பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் 53 ஆவது வருடாந்த மார்கழிப் பஜனை ஊர்வலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) காலை-07 மணியளவில் மேற்படி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
இந்தப் பஜனை ஊர்வலம் பொன்னாலைச் சந்தி, மூளாய் வீதி, மாவடிச் சந்தி ஊடாகச் சித்தன்கேணி மஹா கணபதிப் பிள்ளையார் கோவிலடியை அடைந்து வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலயம், சுழிபுரம், மூளாய்ப் பிள்ளையார் வீதி ஊடாக மீண்டும் இரவு-08.45 மணியளவில் மேற்படி ஆலயத்தைச் சென்றடைந்தது.குறித்த பஜனை ஊர்வலத்தில் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் அடியவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, சித்தங்கேணி மகாகணபதி ஆலயத்தில் நண்பகல் பஜனை நிகழ்வில் கலந்து கொண்ட அடியவர்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.