நலன்புரி நன்மைகள் கொடுப்பனவின் இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பு ஆரம்பம்

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவின் இரண்டாம் கட்ட விண்ணப்பதாரர்களின் வீட்டிற்கு வருகை தந்து தகவல் கணக்கெடுப்புச் செய்யும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (21.01.2025) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இதுதொடர்பான நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுள்ளது.