யாழ்.குப்பிழானில் இளம் குடும்பஸ்தரொருவர் நேற்றுச் சனிக்கிழமை (18.01.2025) திடீர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலியைப் பிறப்பிடமாகவும், குப்பிழான் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுன்னாகம் தபாலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மல்லாகம் உபதபாலகத்தில் அஞ்சல் உதவியாளராகக் கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான பாலகிருஷ்ணன் சசிகுமார் (வயது- 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளைத் தொடர்ந்து இன்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, இவர் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் பொருளாளர் என்பதுடன் குப்பிழான் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய நிர்வாகத்திலும் அங்கத்துவம் வகித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.