யாழ்.நகரில் பஞ்சவர்ணம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய விற்பனைக் கூடம்

யாழ்ப்பாணம் முயற்சியாளர் சங்கத்தால் நடாத்தப்படும் பஞ்சவர்ணம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான புதிய விற்பனைக் கூடம் நாளை திங்கட்கிழமை (20.01.2025) பிற்பகல்-01 மணியளவில் யாழ்ப்பாணம் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு அருகில் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்து கொண்டு குறித்த விற்பனைக் கூடத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.