கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (20.01.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.கடும் மழையுடனான வானிலை காரணமாகக் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் இடம்பெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலத்த மழையுடன் கூடிய வானிலையால் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.