யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மூலவராக, வளாகத்தின் முதல் தலைவராக விளங்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி. ஈழத்திலும், தமிழகத்திலும், உலக கல்விப்புலத்திலும் ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும் தடம்பதித்த அவரின் மேலான நினைவுகளைக் கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர் க.கைலாசபதி நினைவுப் பேருரை இன்று வியாழக்கிழமை (23.01 2025) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் கலந்து கொண்டு 'இனமரபு இசையியலாக தமிழிசை: சங்ககாலம் முதல் எங்கள் காலம் வரை' எனும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெறும்