வெளியானது புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு: சித்தியடைந்த மாணவர்கள் விபரம்!

2024 ஆம் ஆண்டுக்கான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வியாழக்கிழமை (23.01.2025) சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத் தளமான  www.doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிடலாமெனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி பரீட்சைக்குத் தோற்றிய 319,284 மாணவர்களில் 51,244 பேர் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்றுச் சித்தியடைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.