சிறப்புற்ற மயிலணி முத்துமாரி அம்மனின் கும்பாபிஷேக தின உற்சவம்

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின உற்சவம் தை அத்த நாளாகிய கடந்த திங்கட்கிழமை (20.01.2025) காலை-07 மணியளவில் ஆரம்பமாகிப் பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.

அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம், பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய பூந்தண்டிகையில் அம்மன் உள்வீதி, வெளிவீதி உலா வரும் திருக்காட்சியும் இடம்பெற்றது.