யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் பொங்கல் விழா

 திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இம் முறையும் காலை, மாலை நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தைப் பொங்கல் தினமாகிய நாளை செவ்வாய்க்கிழமை (14.01.2025) அதிகாலை-05.30 மணியளவில் இல.238,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக்  கலாமன்றத்தின் பணியகத்தில் பொங்கல் வைபவமும், அதனைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் இல-17 ,மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள மன்றத்தின் கலைஞானசுரபி  தியான இல்லத்தில் பண்பாட்டு வழிபாடும் இடம்பெறும்.

வழமையாகப் பொங்கல் தினத்தன்று மாலையில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள் இம் முறையும் கடந்த வருடத்தைப் போல் அன்றைய தினத்தில் இடம்பெறாது. அதற்குப் பதிலாக எதிர்வரும்-18 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை-06 மணியளவில் இல.238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் ஆரம்பமாகி நடைபெறுமெனத் திருமறைக் கலாமன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.