யாழ்.கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் தைப்பொங்கல் விழா நாளை வியாழக்கிழமை (16.01.2025) முற்பகல்-10 மணியளவில் பாடசாலையின் மண்டபத்தில் பாடசாலை அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த விழாவில் பாடசாலையின் பழைய மாணவர் சி.லிங்கவாசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இதேவேளை, யாழ்.காங்கேசன்துறை கனிஷ்ட வித்தியாலயத்தின் பாடசாலை மட்டப் பொங்கல் நிகழ்வு நாளை வியாழக்கிழமை முற்பகல்-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரை பாடசாலை அதிபர் பா.செந்தூரன் தலைமையில் நடைபெறவுள்ளது.