யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தொடர் தொழில் வாண்மை அபிவிருத்திச் செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் நாளை வியாழக்கிழமை (09.01.2025) பிற்பகல்-02.30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் குடியியல் நடவடிக்கைக் கோவையில் அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மீளப்பெறல் சட்டம் தொடர்பிலான அண்மைக்கால மாற்றங்களும் எனும் தலைப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சானக டி சில்வா கலந்து கொண்டு உரையாற்றுவார்.