புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வது தொடர்பில் அறிவிப்பு!


2024 தரம்- 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும்-27 ஆம் திகதி முதல் அடுத்தமாதம்-06 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமெனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் சிக்கல் இருக்குமாயின் பரீட்சைத் திணைக்களத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1911 மற்றும் 0112784208, 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல் பெற்றுக் கொள்ள முடியுமெனப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வியாழக்கிழமை (23.01.2025) மாலை வெளியிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.