கோண்டாவிலில் 102 வயதில் மறைந்த மூதாட்டி!

ஜே-119 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கொட்டைக்காடு வீதி, கோண்டாவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் இரத்தினம்மா எனும் மூதாட்டி கடந்த வியாழக்கிழமை (30.01.2025) தனது 102 ஆவது வயதில் காலமானார்.

குறித்த மூதாட்டியின் வாழ்க்கை முறையே அவரது நீண்ட ஆயுளுக்குக் காரணமெனவும், தனது வாழ்க்கையில் ஐந்து தலைமுறைகளைக் கண்டு வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து காட்டியதாகவும் அவரது குடும்ப உறவுகள் தெரிவித்தனர். தனது வாழ்க்கையில் ஒரு தடவை மாத்திரமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நூறு வயது வரை தனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் தானே செய்ததாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இதேவேளை, அவரது இறுதிக் கிரியைகள் இன்று காலை-08.30 மணியளவில் யாழ்.கோண்டாவிலில் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.