யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி வணிக மாணவர் மன்றத்தின் 11 ஆவது வணிகச்சுடர் நூல் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை (05.02.2025) முற்பகல்-10 மணி முதல் கல்லூரியின் பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் மன்றத் தலைவர் கோ.தீபிகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும், கல்லூரியின் பழைய மாணவருமான சி.ஜெயகாந்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறை முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடப் பேராசிரியர் சி.அச்சுதன் கலந்து கொண்டு நூலின் நயப்புரையை ஆற்றுவார்.