ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருசை நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (04.02.2025) காலை-09 மணி முதல் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் நடைபெறவுள்ளது.
திருமுறை, நற்சிந்தனைப் பாடல்களைத் தொடர்ந்து முற்பகல்-11 மணியளவில் 'திருமுறைகளின் மகிமை ' எனும் தலைப்பில் இளம்சைவப் புலவர் தி.மனோஜ்குமார் கலந்து கொண்டு உரை ஆற்றுவார்.