தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்ட கொக்குவில் கிழக்கு ஐயப்பன் ஆலயத்தின் 25 ஆவது தைப்பூச விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (14.02.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.
முற்பகல்-10 மணியளவில் விசேட அபிஷேக வழிபாடுகளுடன் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விசேட பூசைகள் நடைபெற்று மதியம் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுமென ஆலயத்தின் தர்மகர்த்தா எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.