யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு கோரி ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (11.02.2025) மாலை-04 மணி தொடக்கம் பெளர்ணமி தினமான நாளை புதன்கிழமை (12.02.2025) மாலை-06 மணி வரையும் தொடர் பாரிய போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
பாரிய தொடர் போராட்டத்திற்குக் காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியினர், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா, மக்கள் போராட்ட முன்னணியினர், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடமாகாணக் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் மாதம்தோறும் வருகின்ற பெளர்ணமி போயா தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடாத்தப்பட்டு வரும் நிலையில் திஸ்ஸ விகாரைக் காணி மற்றும் அதனைச் சூழவுள்ள 14 ஏக்கர் அளவு கொண்ட தனியாருக்குச் சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரிக் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக மாதத்தில் இரண்டு தினங்கள் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் விவகாரம் எதிரொலித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் கருத்துக்களால் குறித்த பிரச்சினை திசை திருப்பப்படும் நிலை உருவானது. இதன்பின்னர் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்குச் சொந்தமானது. அதனை யாருக்கும் கையளிக்க முடியாதென அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ்.மாவட்டப் பதில் செயலர் ம.பிரதீபனுக்குக் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்துத் தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலை உருவானது. இவ்வாறான நிலையிலேயே பாரிய தொடர் போராட்டத்திற்கு மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, தையிட்டியில் இன்றும், நாளையும் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு முழுமையான ஆதரவு வழங்கித் தமிழ்மக்களின் ஒற்றுமையைத் தரணியறியச் செய்யுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.