பிறந்தநாளில் யாழ்.ஊடகவியலாளரின் உயரிய பணி!

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு புலம்பெயர் வாழ் நண்பர்களின் அனுசரணையில் 11 ஆவது ஆண்டாக நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இம்முறை நகுலேஸ்வரன் விஜயசன் ஞாபகார்த்தமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23.02.2024) யாழ்.உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. 

தனது பிறந்தநாளான இன்று இளம் ஊடகவியலாளரான உஷாந்தன் குறித்த இரத்ததான முகாம் தொடர்பில் அறிந்து நீண்டதூரம் பயணித்து உயிர்காக்கும் உன்னத பணியாம் குருதிக் கொடை வழங்கியுள்ளார். அவரது இத்தகைய செயற்பாட்டிற்கு இரத்ததான நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் உட்படப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் ஏற்கனவே பல தடவைகள் குருதிக் கொடை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.