முல்லைத்தீவு மாந்தை விநாயகபுரம் பகுதியில் எழுந்தருளியுள்ள பாணலிங்கேஸ்வரம் நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலய மகாசிவன் இரவுப் பெருவிழா இன்று புதன்கிழமை (26.02.2025) சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இன்று காலை முதல் விசேட அபிஷேகம், பூசை, அர்ச்சனை வழிபாடுகள் நடைபெறவுள்ளது. சிவனடியார்கள் காலை முதல் இரவு முழுவதும் தங்கள் கரங்களால் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். வில்வம் இலைகளால் அரச்சனைகளும் செய்யலாம். அத்துடன் சமயச் சொற்பொழிவுகள், பண்ணிசை, பஜனை, கல்வியியலாளரும், எழுத்தாளருமான திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய பிரபஞ்சத்தில் தூபம் நூல் வெளியீட்டு நிகழ்வு மற்றும் கலைநிகழ்வுகளும் இடம்பெறுமென ஆலய ஆதீன கர்த்தாவும், நெறிப்படுத்துனர்களும் தெரிவித்துள்ளனர்