பொலன்னறுவை வானவன் மாதேவி ஈச்சரத்தில் மகா சிவராத்திரி விழா

சோழர்கள் அமைத்த புராதன வழிபாட்டுத்தலமான வரலாற்றுப் புகழ்மிக்க பொலன்னறுவை வானவன் மாதேவி ஈச்சரத்தில் இன்று புதன்கிழமை (26.02.2025) தொல்பொருள் திணைக்களத்தின் பூரண அனுமதியுடன் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.  

இன்று மாலை-06 மணி முதல் நான்கு சாமப் பூசைகளும் நடைபெறவுள்ளன. இரவு முழுவதும் அபிஷேக பூசை ஆராதனைகளுடன் சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.