இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவுப் பிரதேசப் பொதுமக்களுக்கான குறைகேள் சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை (28.02.2025) முற்பகல்-11 மணியளவில் நெடுந்தீவுக் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, நெடுந்தீவு வாழ் பொதுமக்களையும், பொதுமக்களின் பிரதிநிதிகளையும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.