இணுவில் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையப் பார்வையாளர் வரவேற்புக் கட்டடத் திறப்பு விழா


இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தினரின் ஏற்பாட்டில் இணுவில் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையப் பார்வையாளர் வரவேற்புக் கட்டடத் திறப்பு விழா நாளை சனிக்கிழமை (01.03.2025) காலை-09 மணி முதல் ம.கஜந்தரூபன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெ.இந்திரமோகன் பிரதம விருந்தினராகவும், இணுவில் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையப் பொறுப்பு வைத்திய உத்தியோகத்தர் திருமதி. கலாரதி நடராஜன் சிறப்பு விருந்தினராகவும், இணுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சி.சிவானுஜன், கனடாவைச் சேர்ந்த திருமதி.ஞானமணி திருநாவுக்கரசு ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்