பாரதி அண்ணா..! அமைதியான பேச்சும், அதிராத சுபாவமும் உங்கள் அடையாளம்..! ஆழமான பார்வைகளால் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தவர் நீங்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை இராஜநாயகம் பாரதியின் திடீர் மறைவையொட்டி அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) இரவு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகத்துறையில் நிரப்பமுடியாத வெற்றிடமாய் உங்கள் நினைவு கனத்துக் கிடக்கின்றது. என்றும் நலம் நாடும் உங்கள் குரலைஇழந்துவிட்டோம் அண்ணா..! எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.