கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம்-14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இம்முறை திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும், இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் என எட்டாயிரம் யாத்திரிகர்களும், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் ஆயிரம் பேருமாக மொத்தமாக ஒன்பதாயிரம் பேர் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுவதாக யாழ்.மாவட்டப் பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
கச்சதீவுப் புனித அந்தோனியார் திருவிழா தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (07.02.2025) யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் கலந்துரையாடலில் திருவிழாவில் கலந்து கொள்கின்ற யாத்திரிகர்களுக்கான குடிநீர் வசதி, மலசலகூட வசதி உட்பட அனைத்து வசதிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கச்சதீவுப் பிரதேசம் யாத்திரிகர்களின் வழிபாட்டிற்கேற்பத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச சபைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அடுத்தவாரம் நேரடியாகக் கச்சதீவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்து எங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் உணவு வசதிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அந்தவகையில் யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவும், 15 ஆம் திகதி காலையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் பயன்படுத்தப்படவுள்ளன. 14 ஆம் திகதி அதிகாலை-04 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை அந்த பஸ்கள் புறப்படும்.
போக்குவரத்துக் கட்டணமாக நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்குப் படகில் செல்வோருக்கு ஒருவழிக் கட்டணமாக 1000 ரூபாவும், குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்குப் படகில் செல்வோருக்கு ஒருவழிக் கட்டணமாக 1300 ரூபாவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவிழாக் காலத்தை முன்னிட்டுப் படகு சேவைகளில் ஈடுபடும் தனியார் படகுகள் பொதுமக்களின் பயணத்துக்கு ஏற்றவகையில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையினைக் கடற்படையினர் மூலம் வழங்குமாறு எங்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
திருவிழாவில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்கான சுகாதார ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குழுவினரும் கலந்துரையாடலில் பங்குபற்றினர். கடந்த வருடம் ஏற்பட்ட சில குறைபாடுகளும், அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தினரின் பிரசன்னமும் இந்தக் கலந்துரையாடலில் இருந்துள்ளது. இந்தியாவிலிருந்து கச்சதீவுக்கு வருகைதரும் யாத்திரிகர்களை நடைமுறைக்கு ஏற்ப வரவேற்று ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இதுதொடர்பாக அடுத்தகட்டக் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டு எடுக்க வேண்டிய இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மேற்படி கலந்துரையாடலில் யாழ்.மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார், யாழ்.இந்தியத் துணைத் தூதரக அதிகாரி நாகராஜா, இலங்கைக் கடற்படையின் பிரதித் தளபதி, முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

(செ.ரவிசாந்)