அண்மையில் மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மகனிடம் காங்கேசன்துறைப் பொலிஸார் கடந்த வியாழக்கிழமை (06.02.2025) விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
பிற்பகல்-01.30 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்துக்குச் சென்ற காங்கேசன்துறைப் பொலிஸார் மாவை சேனாதிராஜாவின் உடல்தகனம் செய்யப்பட்ட மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்திலும், அரசடி வீதியிலும் மாவை சேனாதிராஜாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் தடை விதிக்கப்பட்டோர் எனும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களுடன் கூடிய அரசியல்வாதிகளின் கூடிய பெயர்கள் அடங்கிய பதாகை தொடர்பில் அவரது மகன் கலையமுதனிடம் சில நிமிடங்கள் வரை வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதன்போது குறித்த பதாகையைக் கட்டியது யார்? என்ற கேள்விக்கு 'இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது' என அவர் பதிலளித்துள்ளார். முறைப்பாடொன்றுக்கு அமையவே இவ் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, தச்சன்காடு இந்துமயானத்தில் கட்டப்பட்டிருந்த பதாகையை மாத்திரமே தான் அப்பாவின் இறுதிக் கிரியை இடம்பெற்ற நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) தான் நேரில் கண்டதாகவும், மற்றைய வீதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை தொடர்பில் அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கூறியே தான் அறிந்து கொண்டதாகவும் கலையமுதன் தெரிவித்தார்.