தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மாவைக் கந்தனை நோக்கிப் பால்குடப் பவனி

முருகப்  பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும்  முக்கிய விரதங்களில் ஒன்றான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை (11.02.2025) பிற்பகல்-02.30 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலயத்தின் தலைவாசல் கோபுர முன்றலில் பால்குடப் பவனி ஆரம்பமாகி வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.  

இந்தப் பால்குடப் பவனியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அடியவர்களை நாளை ஞாயிற்றுக்கிழமைக்கு (09.02.2025) முன்னர் 0773691392 எனும்  தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு  கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். தேவையேற்படும் பட்சத்தில் பால்குடப்  பவனியில் பங்கேற்கவுள்ள அடியவர்களுக்கு இலவச வசதிகள் செய்து தரப்படுமெனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.