கோண்டாவிலில் கும்பாபிஷேக தின சங்காபிஷேகம்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய கும்பாபிஷேக தின சங்காபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை (09.02.2025) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07 மணிக்கு மகாகாளி அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகமும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விசேட பூசைகள், வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாள் வீதி உலா வரும் திருக்காட்சியும், இறுதியாக அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கலும் நடைபெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.