காதலரே வாழ்க!


காதல் என்றும் புனிதம் தான்.... 

இதை என்றும் சொல்லும் மனிதம் தான்!

புரிந்த காதல்.... உண்மைக் காதல்.... 

உயர்ந்த காதல் வாழ்வின் வெற்றி கொள்ளுமே!

இறுதி வரை வாழுமே! உறுதியுடன் வாழுமே!

காதல் கொண்ட உள்ளங்கள் உண்மையாக 

வாழுங்கள்! உறுதியாக வாழுங்கள்.!

மோதல் ஒன்று வந்திட்டால் 

சாதல் ஒரு முடிவல்ல -வாழ்வின் 

பாதிக் காதல்கள் சாதல் தான் முடிவென்று 

வாழ்வைத் தாமே முடிக்கின்றார்!

தாழ்வு நிலையை அடைகின்றார்!

பெற்றோர் கற்றோர் கூறுவது 

பாசம் அன்றி வேறல்ல!

மோசம் என்று நினைத்து விட்டால் 

பாசம் கண்ணை மறைத்து விடும்!

வேசம் கொண்டு நடவாமல் 

பெற்றோர் ஆசி வேண்டும் என்று 

காதல் நீங்கள் செய்யுங்கள்!

நல்ல காதல் புரிந்த காதல்!

என்றும் என்றும் உயர்ந்த காதல்!

பெற்றோர் வாழ்த்தும் காதல் தான்!

இறுதிவரை வாழுமே உறுதியான காதலே!

வாழ்க வாழ்க காதலே வளமுடன் வாழ்கவே!

            

                                          கவி ஆக்கம்:- செல்வி :சற்குணசிங்கம் நளாஜினி,

                                          மயிலணி, சுன்னாகம்.