நல்லூரில் மூன்று நாட்கள் முழங்கவுள்ள கம்பத் தமிழ்!

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா-2025 இன்று வெள்ளிக்கிழமை (14.02.2025) மாலை-04.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழகப் பெருந் தலைவர் ஜெ.விஸ்வநாதன் தலைமையில் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் மூன்று தினங்கள் கம்பன் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தொடக்க உரையையும், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வாழ்த்துரையையும் ஆற்றுவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பாரதி கிருஷ்ணகுமாரை ஆணையாளராகக் கொண்ட இலக்கிய ஆணைக்குழு சிறப்பு நிகழ்வாக நடைபெறும். 

மூன்று நாட்களிலும் விவாத அரங்கு, பட்டிமன்றம், சிந்தனை அரங்கு, நாடக அரங்கு, வழக்காடு மன்றம், தனியுரை போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.