சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல்-1 இல் ஆரம்பம்

2024 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், 1066 மத்திய நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம்-01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் முதற்கட்டம் இடம்பெறவுள்ளதுடன் மதிப்பீட்டுப் பணிகளில் நாடு முழுவதிலும் 16 ஆயிரம்  ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.