வடலியடைப்பில் நாடக விழா

அண்மையில் மறைந்த ஈழத்துத் தமிழ் நாடகத் துறையின் பிதாமகன் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நினைவாகச் சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்து நடாத்தும் நாடக விழா இன்று திங்கட்கிழமை (31.03.2025) மாலை-03 மணி முதல் வடலியடைப்பு ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க.ரதிதரன் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றுவார். அதனைத் தொடர்ந்து நாடக அரங்கக் கல்லூரியின் "தான் விரும்பாத் தியாகி" நகைச்சுவை நாடகம்,  சண்டிலிப்பாய்க் கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கற்று உணர்வோம் நாடகம், கூத்தாட்டு அவைக் களத்தின் பட்டறிவு சிறுவர் நாடகம், செம்முகம் ஆற்றுகைக் குழுவின் எங்கே? எங்கே? குடை எங்கே? சிறுவர் நாடகம், சண் நாடகக் குழுவின் முட்டை சிறுவர் நாடகம், வடலியடைப்புக் கலைவாணி கலை மன்றத்தின் வார்த்தைகளற்ற நடன நாடகம் ஆகிய நாடகங்களும், ரவர் அரங்க மண்டப முதலாம் வருட மாணவர்களின் வசந்தன் கூத்தும் மேடையேற்றப்படவுள்ளன.