'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூன்றாம் பங்குனித் திங்கள் உற்சவம் நாளை திங்கட்கிழமை (31.03.2025) காலை-09 மணி முதல் சிறப்பாக நடைபெறவுள்ளது.
ஸ்நபனாபிஷேகம், விசேட மங்கள பூசை, வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து அம்பாள் திருவீதி உலா வரும் காட்சியும் இடம்பெறும். தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுமென ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.