2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சராகக் கடந்த பெப்ரவரி மாதம்-17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பாதீட்டை முன்வைத்தார். இதனையடுத்துக் கடந்த பெப்ரவரி மாதம்- 25 ஆம் திகதி பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்போது இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.