வலிகாமம் மேற்குப் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் முன்னுதாரணமான தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுமாறு பல கட்சிகளும், சுயேட்சைகளும் அழைப்பு விடுத்திருந்த போதிலும் எமது பொன்னாலை வட்டாரத்தில் புதியவர்களுக்கு இடமளிக்கும் வகையில் நான் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நல்லதம்பி பொன்ராசா அறிவித்துள்ளார்.       

கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் எமது வட்டாரத்தில் மண் வீதிகளாக இருந்த சில வீதிகளை தார் வீதிகளாக புனரமைத்தமை உட்பட பல மாற்றங்களை ஏற்படுத்தினோம் என்பது பெருமைக்குரிய விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, அவரது தீர்மானத்தை முன்னுதாரணமான தீர்மானமெனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.