நல்லூரில் சிறுவர் நாடக இரவு

கலையூடாகத் தன்னம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான களமாகச் செயற்திறன் அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர் நாடக இரவு நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (22.03.2025) மாலை-05 மணி முதல் இரவு-08 மணி வரை நல்லூர் முதலாவது குறுக்கு வீதியில் இயங்கி வரும் செயற்திறன் அரங்க இயக்கத்தின் திறந்தவெளி அரங்கில் இடம்பெறவுள்ளது.