இளவாலை சென் யூட் ஆலய இளைஞர் கழகத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இளவாலை சென் யூட் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.