இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு லம்போதரா விளையாட்டுக் கழகத்தால் யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவாக வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி இன்று வியாழக்கிழமையுடன் (20.03.2025) நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்குரிய விண்ணப்பப் படிவத்தை இணுவில் பொதுநூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது மென்பிரதியை அச்சிட்டு விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவல்களுக்குச் சதுரங்கப் போட்டியாளர்கள் 0212241930 அல்லது 0770737919 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மாபெரும் சதுரங்கச் சுற்றுப் போட்டி ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23.03.2025) காலை-07.30 மணியளவில் இணுவில் பொதுநூலகத்தில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.